Kumbakonam Tourism
Resorts, Hotels and Lodges in Kumbakonam Cars, Travels, Cabs and Tour Operators in Kumbakonam Vegetarian Restaurants in Kumbakonam Non Vegetarian Restaurants in Kumbakonam Textiles and Jewellery Show Rooms in Kumbakonam Statues and Idols in Kumbakonam Marriage Halls  in Kumbakonam Silk Saree Manufacturers in Kumbakonam Shopping Centers in Kumbakonam City Information of Kumbakonam
Siva Temples in Kumbakonam
Vishnu Temples in Kumbakonam
Nathan Kovil , Kumbakonam
Amman Temples in Kumbakonam
Kumbakonam Amman temples
Navagraha Temples Kumbakonam
Kumbakonam Navagraha Temples
Unesco Temples in Kumbakonam
Kumbakonam Unesco Temples
Parikaram Temples in Kumbakonam
Kumbakonam Parikaram Temples
Temples in Kumbakonam
Temples of Kumbakonam
Sarangapani Temple, Kumbakonam Chakrapani Temple, Kumbakonam Ramaswamy Temple, Kumbakonam Adhi Varaha Perumal Temple, Kumbakonam Biramman Kovil , Kumbakonam Rajagopalaswamy Temple, Kumbakonam Oppiliappan Temple, Kumbakonam Nachiyar Kovil , Kumbakonam Thirucherai Saranathar Temple, Kumbakonam Thiru Athanur Temple Thiru Nagai Temple Thiru Pulaputhankudi Temple Thiru Velliyankudi Temple Thirukannapuram Temple, Kumbakonam Nathan Kovil , Kumbakonam Patteeswaram Durgai Amman Temple, Kumbakonam Valankaiman Mariamman Temple, Kumbakonam Ayyavadi Prithyankara Devi Temple, Kumbakonam Thirukarukavur Karparatchambihai Temple, Kumbakonam Thirukadaiyur Abirami Amman Temple, Kumbakonam Amman Kovil, Kumbakonam Kuthanur Gnana Saraswathi Temple, Kumbakonam Udayalur Selva Ma Kaliamman Temple, Kumbakonam Punnainallur Mariamman Temple, Kumbakonam e Kathiramankalam Vana Durgai Temple, Kumbakonam Ammankudi Temple, Kumbakonam Thirusakthimutram  Ambikai Temple Thirumiyachur Lalithambikai, Kumbakonam Karuppur Petti Kali Amman, Kumbakonam Kalika Parameswari Temple, Kumbakonam Thirumankalakudi Temple, Navagraha Temples Suriya Bahavan Temple, Navagraha Temples Chandra Bahavan Temple, Navagraha Temples Guru Bahavan Temple, Navagraha Temples Kethu Bahavan Temple, Navagraha Temples Budhan Bahavan Temple, Navagraha Temples Sukkira Bahavan Temple, Navagraha Temples Ragu Bahavan Temple, Navagraha Temples Saneeswara Bahavan Temple, Navagraha Temples Sevvai Bahavan Temple, Navagraha Temples Tanjore Prahadeeswarar Temple, Darsuram Iravatheeswarar Temple, Kumbakonam Kankai Konda Cholapuram Temple Wedding Parikaram Temples, Kumbakonam Wedding Parikaram Temples, Kumbakonam Kuzhanthai Parikaram Temples, Kumbakonam Noikal Parikaram Temples, Kumbakonam Astroly Numerology Nadi Jothidam Kairekai Sasthiram Kala Kastheeswarar Temple, Kumbakonam Viyala Someswarar Temple, Kumbakonam Adhi Kambatta Viswanathar Temple, Kumbakonam Kottaiyur Koteeswarar Temple, Kumbakonam Pana Puresswarar Temple, Kumbakonam Thirunageswaram Temple, Kumbakonam Thiruvidaimaruthur Mahalingaswamy Temple, Kumbakonam Thirubuvanam Sarabeswarar Temple, Kumbakonam Thiruppurambiyam Temple, Kumbakonam Thirucherai Rina Vimosanar Temple, Kumbakonam Adhi Kumbeswarar Temple, Kumbakonam Nageswarar Temple, Kumbakonam Gowthameswarar Temple, Kumbakonam Kasi Viswanathar Temple, Kumbakonam Abi Muheswarar Temple, Kumbakonam
கும்பமேளாவிற்கு இணையான மாசி மக பெருவிழாவும், மகா மகத் திருக்குள சிறப்புகளும்

கும்பகோண தல புராணம்


மிகப் பெரிய ஊழிக்காலம் நெருங்குவதை உணர்ந்த பிரம்ம தேவர், அனைத்து உயிர்களும் அழிந்து விடுமே என அஞ்சி, முக்கண்ணனை நாடினார். கயிலை நாதனும், "பிரம்ம தேவரே, புண்ணிய பகுதிகளிலிருந்து மண் கொண்டு வந்து, அம் மண்ணோடு அமுதம் கலந்து ஒரு "அமுத குமபம்" செய்வீர். பின், அக் கும்பத்தினுள், வேதங்கள், புராணங்கள்,ஆகமங்கள், சாஸ்திரங்கள், இதிகாசங்கள் என மீண்டும் உலகைப் படைத்திட உதவும், யாம் உமக்கு அளித்த "சிருஷ்டி பீஜத்தை" வைத்து, கும்பத்தை பூணூல் சுற்றி, மாவிலை, வில்வ இலைகள், தேங்காய் ஆகியன வைத்து "பூரண கும்பமாக்கி" , அதனை ஒரு உறியில் இட்டு, மேரு மலையில் ஓரிடத்தில் வைத்து நித்ய பூஜைகள் செய்வீராக. பிரளயத்தில், அக் கும்பமானது, ஊழி வெள்ளத்தால் தென் திசை நோக்கி சென்று ஓரிடத்தில் தங்கும். அங்கே, யாம் தோன்றி மீண்டும் இவ்வுலகை படைத்திடுவோம்" என அருள் புரிந்தான். ஊழிக்காலமும் வந்தது. பிரளயத்தில் வெள்ளத்தால் "அமுத கும்பம்" அடித்து செல்லப்பட்டு புண்ணிய ஷேத்திரமாம் "கும்பகோணத்தை" வந்தடைந்தது.

ஊழி வெள்ளம் அடங்கியது. கூறியபடியே, முக்கண்ணனும், கைகளில் வில், அம்பு கொண்டு வேட உரு எடுத்து புண்ணிய ஷேத்திரம் வந்தடைந்தார். கும்பத்திலிருந்த "சிருஷ்டி பீஜமும்", "அமுதமும்" எங்கும் பரவ வேண்டி, கிராத மூர்தியாய் (வேட உருவில்) வந்த ஈசன் தன் வில் கொண்டு, கும்பத்தின் மேல் பாணம் தொடுத்தான். கும்பம் சிதறியது. கும்பத்தின் மேலிருந்த அனைத்து மங்களப் பொருட்களும் வெவ்வேறு இடம் சென்று வீழ்ந்து, ஆங்காங்கே "சுயம்பு லிங்கங்களாக" உருவெடுத்தன.

"அமுத கும்பம்" வந்து தங்கிய இடமே "ஆதி கும்பேஸ்வரர்" திருக்கோயில். அமுத கும்பத்தின் வாய்ப் பகுதி விழுந்த இடம் "குடவாயில்" (கும்பத்தின் வாயில்) என்றானது.அங்கு தோன்றிய மூர்த்தி "கோணேஸ்வரர்" ஆனார். பாணம் தொடுத்த இடத்தில் தோன்றிய லிங்கம் "பாணபுரீஸ்வரர்" ஆனது. கும்பத்தில் இருந்த வில்வ இலைகள் விழுந்த இடத்தின் ஈஸ்வரன் " வில்வனேஸ்வரர்" ஆனார். (இன்றைய நாகேஸ்வரர்). கும்பத்தை தாங்கி வந்த உறி விழுந்த இடத்தில் உருவானவர் "சிக்கேசர்" . கும்பத்தின் மேலிருந்த "தேங்காய்" விழுந்த இடத்தில் " அபிமுகேசரும்", "பூணூல்" விழுந்த இடத்தில் " கௌதமேசரும்" தோன்றினர்.

ஆங்காங்கே சிதறிய அமுதம் போக கும்பத்தில் மீதம் இருந்த அமுதம் கும்பகோண ஷேத்திரம் எங்கும் பரவுவதை கண்ட ஈசன், " வழியும் அமுதம் அனைத்தையும் பூமியே குழிந்து ஏற்க்கட்டும்" என அருள, அமுதம் அனைத்தும் இரு இடங்களில் தங்கியது. அவைதான், பொற்றாமரை தீர்த்தமும், மகாமகக் குளமும். இவற்றில், மகாமக தீர்த்தம் மிகப் பெருமை வாய்ந்தது. இந்த குளத்தில்தான், மாசி மாதம், மகம் நட்சத்திரத்தில், கும்பகோணத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் இருந்தும், உற்ச்சவ மூர்த்திகள் எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுக்கின்றனர். அனைத்து கோயில்களின் உற்சவ மூர்த்திகளும், ஓரிடத்தில் கூடி, ஒன்றாக தம்மை வேண்டுவோர்க்கு தீர்த்தவாரி தருவது, வேறெங்கும் காண முடியாத, உலகிலேயே மகா மகத் திருக்குளத்திற்கு மட்டுமே உரியதானதொரு சிறப்பு. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் " மகாமகப் பெருவிழா" , கும்பமேளாவைப் போன்று மிகச் சிறப்பு வாய்ந்தது. மாசி மக தீர்த்தவாரியில் பக்தர்களுக்கு அருள் புரிய நகரின் புராதனமான 12 சிவாலயங்களில் (ஆதி கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், அதி கம்பட்ட விஸ்வநாதர், காலகஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், கௌதமேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கொட்டையூர் கோடீஸ்வரர், சாக்கோட்டை அமிர்த கலச நாதர் மற்றும் அபி முகேஸ்வரர்) இருந்தும் உற்ச்சவர்கள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

மகாமகக் குளத்தின் வரலாறும், சிறப்புகளும்

காவிரி, கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சரயு, துங்கபத்திரா, கிருஷ்ணா ஆகியன மக்கள் தம் பாவங்கள் நீங்க நீராடும் புண்ணீய நதிகளாகும். இந் நதிகள், நவ கன்னியர் என்றும் அழைக்கபடுவர். இந்த நவ கன்னியர், ஒரு சமயம், கயிலை நாதனிடம் சென்று, " பரம் பொருளே, மக்கள் தங்கள் பாவம் நீங்க, எங்களில் நீராடுகின்றனர். இதனால், அவர்களது பாவம் அனைத்தும் எங்களைச் சேர்கிறது. இவ்வறு எங்களை சேர்ந்த பாவங்களில் இருந்து எங்களை காத்தருள வேண்டும் " என முறையிட்டனர். ஈசனும் அதற்கு, " நவ கன்னியரே, கவலை வேண்டாம். கும்பகோணம் என்னும் புண்ணிய ஷேத்திரத்தில், மகாமகக் குளம் என்னும் புனித தீர்த்தம் உள்ளது.அங்கு சென்று, குரு சிம்ம ராசியில் தங்கும் மாசி மாத பௌர்ணமி அன்று, மக நட்சத்திரம் கூடுகின்ற வேளையில், அத் தீர்த்தத்தில் நீராடினால், உங்கள் பாவம் அனைத்தும் நீங்கிவிடும்" என ஆசி கூறியதோடு மட்டுமன்றி, நவ கன்னியரையும் இக் குளத்திர்கு அழைத்து வந்து, மகாமக தீர்த்தவாரியின் பெருமைகளை விளக்கி கூறினார் என்கிறது இக் குளத்தின் தல புராணம்.

அதன் பிறகு, ஒவ்வொரு மாசி மகத் தீர்த்தவாரியின் போதும், நவ கன்னியர் இங்கு எழுந்தருள்கிறார்கள். அதுமட்டுமன்றி, இங்கேயே நவ தீர்த்தங்களாக நிரந்தர வாசம் செய்வதால், இத் தீர்த்தம் "கன்னிகா தீர்த்தம்" என்றும் அழைக்கப்படுகிறது. அமுத கும்பத்தில் இருந்து சிதறியதால், அமுதவான தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது. இதைத் தவிர அமுத வாவி, பாவநாச தீர்த்தம் என்றும் பெயர் கொண்டுள்ளது. இக் குளத்தை உளமார, ஒருமுறை வழிபட்டால், விண்ணுலக தேவர் அனைவரையும் வணங்கிய புண்ணியம் வந்தைடையும்.

மகாமகம் ஒரு புண்ணீய தீர்த்தம். இறைவனின் கருணையை பெற வேண்டி, பல புனித தீர்த்தங்கள் இங்கு ஒன்று கூடியுள்ளன. இங்கு முதன் முதலில் தீர்த்தம் அமைத்தவர் பிரம்ம தேவர். பின்னர் அஷ்ட திக்கு பாலகர்களும், நவ கன்னியரும் தங்களுக்கென தீர்த்தம் அமைத்தனர். மற்றும் தேவர்கள், கந்தர்வர், சித்தர் போன்றோர் உருவாக்கிய தீர்த்தங்களும் உள்ளன. இவ்வாறு, இக் குளத்தில் மொத்தமாக 66 கோடி தீர்த்தங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்ததே "மகாமக திருக்குளம்".

தீர்த்தங்கள்
நீராடலின் பயன்கள்
தீர்த்தங்கள்
நீராடலின் பயன்கள்
பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம்
பிதுர்க்களை கரையேற்றும்
அஷ்டதிக் பாலகர்கள் உருவாக்கிய தீர்த்தங்கள்
இந்திர தீர்த்தம்
வானுலக வாழ்வளிக்கும்
வருண தீர்த்தம்
அயுள் விருத்தி உண்டாகும்
அக்னி தீர்த்தம்
பிரம்மஹத்தி தோஷம் விலகும்
வாயு தீர்த்தம்
பிணிகள் அகலும்
யம தீர்த்தம்
யம பயம் நீங்கும்
குபேர தீர்த்தம்
சகல செல்வங்கள் சேரும்
நிருதி தீர்த்தம்
துஷ்ட பயங்கள் விலக்கும்
ஈசான தீர்த்தம்
சிவனடி கிடைக்கும்
நவ கன்னிகைகள் உருவாக்கிய தீர்த்தங்கள்
கங்கா தீர்த்தம்
கயிலை பதவி கிடைக்கும்
சரயு தீர்த்தம்
மனக் கவலைகள் தீர்க்கும்
காவிரி தீர்த்தம்
குழந்தைப் பேறு கிடைக்கும்
கோதாவரி தீர்த்தம்
எண்ணீயது நிறைவேறும்
யமுனை தீர்த்தம்
பொன்விருத்தி உண்டாகும்
கிருஷ்ணா தீர்த்தம்
வாழ்வில் கோலாகலம் தரும்
சரஸ்வதி தீர்த்தம்
ஞானம் கிடைக்கும்
நர்மதை தீர்த்தம்
திடகாத்திரம் உண்டாகும்
துங்கபத்திரா தீர்த்தம்
அஸ்வமேத யாக பலன் தரும்
இதர தீர்த்தங்கள்
தேவ தீர்த்தம்
தேவலோகப் பதவி கிட்டும்
அறுபத்தாறு கோடி தீர்த்தம்
துன்பம் நீங்கி, இன்பம் தரும்

இத் திருக்குளத்தை உளமார ஒருமுறை வழிபட்டால், "விண்ணுலக தேவர்கள்" அனைவரையும் வணங்கிய புண்ணியம் வந்தடையும். ஒருமுறை வணங்கி வலம் வந்தால், இப் புவியில் உள்ள அனைத்து புண்ணிய தலங்களையும் "100 முறை வலம் வந்த" பலன் கிட்டும். ஒரு முறை புனித நீராடுவ்து, "கங்கை நதிக் கரையில் 100 ஆண்டுகள் வசித்த" புண்ணியம் அருளும். மாசி மகத்தன்று செய்யும் புனித நீராடலால், நீராடுபவரக்கு மற்றுமன்றி அவரது மனைவிக்கும், அவர்களது 7 தலைமுறைகளையும் பாவங்களில் இருந்து காத்திடும். இக் கரையில், "அந்தணர்களுக்கும், சுமங்கலிப் பெண்களுக்கும் தானம் அளிப்பது" புண்ணியம். தினம் நீராடுவது மிகச் சிறப்பு. "அமாவசை, பௌர்ணமி, மாதப் பிறப்பு, வெள்ளிக் கிழமை, சிவ ராத்திரி, கிரகண வேளைகள்" போன்ற சமயங்களில் நீராடுவதால் பெரும் புண்ணியங்கள் வந்தடையும்.

Cabs in Kumbakonam
Furnitures in Kumbakonam
Hotels in Kumbakonam
Vinayakar Worship Hanuman Worship Lord Muruga Arupadai Veedukal Dhosa Parikarankal Abisheka Palankal Hinduism Hinduism Samaya Kuravar Nalvar Nayanmar Arupaththu Moovar Panniru Alwarkal Trichy Divya Desam Kumbakonam Divya Desam Thirunankur Divya Desam Tirunelveli Nava Thiruppathikal Panja Pootha Thalankal Nava Kailayankal Jothir Linkankal Siva Worship
                    All Photos and Imgaes Including Cocept are Copyrighted @ Kumbakonam Tourism                    To Use Images and Content ASK Webmasters.                    A Social Initiative Project Maintained by Elucidators.in , Kumbakonam