Kumbakonam Tourism
Resorts, Hotels and Lodges in Kumbakonam Cars, Travels, Cabs and Tour Operators in Kumbakonam Vegetarian Restaurants in Kumbakonam Non Vegetarian Restaurants in Kumbakonam Textiles and Jewellery Show Rooms in Kumbakonam Statues and Idols in Kumbakonam Marriage Halls  in Kumbakonam Silk Saree Manufacturers in Kumbakonam Shopping Centers in Kumbakonam City Information of Kumbakonam
Siva Temples in Kumbakonam
Vishnu Temples in Kumbakonam
Nathan Kovil , Kumbakonam
Amman Temples in Kumbakonam
Kumbakonam Amman temples
Navagraha Temples Kumbakonam
Kumbakonam Navagraha Temples
Unesco Temples in Kumbakonam
Kumbakonam Unesco Temples
Parikaram Temples in Kumbakonam
Kumbakonam Parikaram Temples
Temples in Kumbakonam
Temples of Kumbakonam
Sarangapani Temple, Kumbakonam Chakrapani Temple, Kumbakonam Ramaswamy Temple, Kumbakonam Adhi Varaha Perumal Temple, Kumbakonam Biramman Kovil , Kumbakonam Rajagopalaswamy Temple, Kumbakonam Oppiliappan Temple, Kumbakonam Nachiyar Kovil , Kumbakonam Thirucherai Saranathar Temple, Kumbakonam Thiru Athanur Temple Thiru Nagai Temple Thiru Pulaputhankudi Temple Thiru Velliyankudi Temple Thirukannapuram Temple, Kumbakonam Nathan Kovil , Kumbakonam Patteeswaram Durgai Amman Temple, Kumbakonam Valankaiman Mariamman Temple, Kumbakonam Ayyavadi Prithyankara Devi Temple, Kumbakonam Thirukarukavur Karparatchambihai Temple, Kumbakonam Thirukadaiyur Abirami Amman Temple, Kumbakonam Amman Kovil, Kumbakonam Kuthanur Gnana Saraswathi Temple, Kumbakonam Udayalur Selva Ma Kaliamman Temple, Kumbakonam Punnainallur Mariamman Temple, Kumbakonam e Kathiramankalam Vana Durgai Temple, Kumbakonam Ammankudi Temple, Kumbakonam Thirusakthimutram  Ambikai Temple Thirumiyachur Lalithambikai, Kumbakonam Karuppur Petti Kali Amman, Kumbakonam Kalika Parameswari Temple, Kumbakonam Thirumankalakudi Temple, Navagraha Temples Suriya Bahavan Temple, Navagraha Temples Chandra Bahavan Temple, Navagraha Temples Guru Bahavan Temple, Navagraha Temples Kethu Bahavan Temple, Navagraha Temples Budhan Bahavan Temple, Navagraha Temples Sukkira Bahavan Temple, Navagraha Temples Ragu Bahavan Temple, Navagraha Temples Saneeswara Bahavan Temple, Navagraha Temples Sevvai Bahavan Temple, Navagraha Temples Tanjore Prahadeeswarar Temple, Darsuram Iravatheeswarar Temple, Kumbakonam Kankai Konda Cholapuram Temple Wedding Parikaram Temples, Kumbakonam Wedding Parikaram Temples, Kumbakonam Kuzhanthai Parikaram Temples, Kumbakonam Noikal Parikaram Temples, Kumbakonam Astroly Numerology Nadi Jothidam Kairekai Sasthiram Kala Kastheeswarar Temple, Kumbakonam Viyala Someswarar Temple, Kumbakonam Adhi Kambatta Viswanathar Temple, Kumbakonam Kottaiyur Koteeswarar Temple, Kumbakonam Pana Puresswarar Temple, Kumbakonam Thirunageswaram Temple, Kumbakonam Thiruvidaimaruthur Mahalingaswamy Temple, Kumbakonam Thirubuvanam Sarabeswarar Temple, Kumbakonam Thiruppurambiyam Temple, Kumbakonam Thirucherai Rina Vimosanar Temple, Kumbakonam Adhi Kumbeswarar Temple, Kumbakonam Nageswarar Temple, Kumbakonam Gowthameswarar Temple, Kumbakonam Kasi Viswanathar Temple, Kumbakonam Abi Muheswarar Temple, Kumbakonam
 
  <<<  நவக்கிரக நாயகர்கள் வழிபட்டு தம் பாவங்கள் தீர்த்த " திருமங்களக்குடி "

காலவ முனிவரின் தவத்தை மெச்சிய, நவக்கிரகங்கள் அவரை பிடிக்க வேண்டிய தொழுநோயிலிருந்து அவரை காத்தருளினர். இதைக் கண்ட பிரம்மன், நவக்கிரகங்களை அத் தொழுநோய் பிடிக்கட்டும் என சபித்தார். அஞ்சி நடுங்கிய நவக்கிரகங்கள், சாப விமோஷனம் கேட்க, பிரம்மனும் மனமிரங்கி, "அர்க்கவனம்" எனும் வெள்ளெருக்கங்காடு சென்று தவமிருக்க சொன்னார். நவ நாயகர்களும் அவ்வாறே. இத் தலம் வந்து, பிராணவரதரை நோக்கி கடும் தவம் புரிந்தனர்.எழுபத்தெட்டு நாட்கள் செய்த தவத்தின் பயனாக, மங்களநாயகி சமேத்ராய் பிராணவரதர் தோன்றி, நவக்கிரகங்களை காத்தருளி " நவக்கிரகங்களே, உங்களது நோய் முற்றிலும் நீங்கட்டும். நீங்கள் தவம் செய்த இவ் வனத்தில், ஒவ்வொருவரும் தனி சந்நதி கொண்டு அருள்புரிவிர் " என வரமளித்தார். பிராணவரதர் குடிகொண்டுள்ள தலம் " திருமங்கலக்குடி" என்றும்,மேலும் அறிய ...

சூரியபகவான், உஷா தேவி, சாயா தேவியுடன் அருள்பாலிக்கும் "சூரியனார் கோயில்"   >>>

பித்ரு காரகனான " சூரியன் " உஷா தேவி, சாயா தேவி என இரு மனைவியரையும், யமன், சனி, சுக்ரீவன், கர்ணன், மற்றும் அசுவினி என ஐந்து புத்திரர்களையும், பத்திரை மற்றும் யமுனை என இரு புத்திரிகளையும் கொண்டவன். ஏழு வெவ்வேறு வண்ணங்கள் கொண்ட குதிரைகள் பூட்டிய, ஒரு சக்கரம் உடைய தேரில், மேரு மலையை வலமாக சுற்றி வருபவன். கிருத்திகை, உத்திரம் மற்றும் உத்திராட நட்சத்திரங்களின் அதிபதி. சிவனது முக்கண்ணில், வலக் கண்ணாக இருப்பவன். புகழ், செல்வாக்கு. ஆட்சித்திறம் போன்றவற்றை அருள்பவன். தன்னை வழிபடுவோரின் பகை அழித்து, கவலை போக்கி வளம் பெறச் செய்பவன். கண், காமாலை மற்றும் இருதய நோய்களை தீர்ப்பவன். " திருமங்கலக் குடி " சென்று பிராணவரதரையும், மங்களநாயகியையும் வழிபட்ட பின்னரே " சூரியனார் கோயில் " வந்து வழிபட வேண்டும்  மேலும் அறிய ...
 
  <<<  முக்கண்ணனின், இடது கண்ணான " சந்திர பகவான் " அருளும் "திங்களூர்"

முக்கண்ணனது, இடக் கண்ணாக இருக்கும் "சந்திரன் " குடி கொண்டுள்ளது திருவையாறை அடுத்துள்ள " திங்களூரில் ". திருப்பதி வேங்கடனின் காலடியில் குடிகொண்டுள்ளவன். தக்கனது சாபத்தால், நாள்தோறும் தேய்ந்து, பின்னர் வளர்பவன். கடக ராசிக்கும், ரோஹினி, அஸ்தம் மற்றும் திருவோண நட்சத்திரங்களுக்கும் அதிபதி. வெண்மை நிற மலர்களால் இவனை அர்ச்சிப்பதாலும், வெண்ணிற ஆடைகள் அணிவதாலும், பௌர்ணமி விரதம் இருப்பதாலும், வெண்ணிற பொருட்களை தானம் செய்வதாலும் (சந்திரனுக்கு மிகப் பிடித்த அரிசி தானம் சிறப்பு) " சந்திர கிரக தோஷம் " நீங்குகிறது. திங்களூர், தேவரப் பாடல் பெற்ற தலம். அப்பூதியடிகள் என்ற சிவ பக்தரின் மகனை பாம்பு தீண்ட, நாவுக்கரசர் சிவனை வேண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பெறச் செய்த பெருமை பெற்ற திருத்தலம் இத் " திங்களூர் "  மேலும் அறிய ...

புத்திர மற்றும் பொருள் காரகனான "குரு பகவான்" அருளும் " ஆலங்குடி"  >>>

நவக்கிரகங்களில் முழு முதற் சுப கிரகமான " குரு " பொன்னிறத்தவன். பிற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு பெற்றவன். ஒருவரது ஜாதகத்தில், மற்ற கிரக தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை கிடைத்தால், அவையாவும் நீங்கிவிடும். இதையே " குரு பார்க்க, கோடி நன்மை " என்பர். கடக ராசியில் உச்சம் பெறும் இவரின் சொந்த வீடு தனுசு மற்றும் மீனம் ஆகும். புனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரங்களின் அதிபதி. குரு, புத்திர மற்றும் பொருள் காரகன். குரு பகவானுக்கென தனி சந்நதி கொண்டு விளங்கும் குருத் தலமான "ஆலங்குடி" தேவரம் பாடப் பெற்றது. இத் தலம் விஷம் தீண்டா திருத்தலம். இங்கு விஷ ஜந்துக்கள் தீண்டி இறந்தவர் இல்லை. காசியில் இறப்பவரது காதில், " பஞ்சாட்சரத்தை" விஸ்வனாதர் உரைப்பது போல, இங்கு இறப்பவர் காதில் "ஈஸ்வரன் " உரைப்பதாக ஐதீகம். வியாழக் கிழமைகளில் ஆலங்குடி சென்று  மேலும் அறிய ...
 
  <<<  சாயா கிரகமான " ராகு பகவான்" குடி கொண்டுள்ள " திருநாகேஸ்வரம்"

" கேது " ராகுவைப் போன்றே சாயா கிரகம். ஞான காரகன். மற்ற கிரகங்களை போல உச்ச வீடோ, ஆட்சி வீடோ இதற்கு கிடையாது. கேது நல்ல நிலையில் அமையப் பெற்ற ஜாதகர், ஞானமும் , தெய்வீக ஆற்றலும் பெற்று விளங்குவார். ராகுவை போல இவரும், திருமணத் தடை, மகப் பேறின்மை போன்றவற்றின் காரணகர்த்தா. லக்கினத்தில், ஒருவருக்கு, 12 ஆம் இடத்தில் கேது இருந்தால், அதுவே அவருக்கு கடைசிப் பிறவி. மறு பிறவி கிடையாது. " கேதுவைப் போல் கெடுப்பாரில்லை " என்பர். கூடா நட்பு, எதிர்பாரா விபத்துகள், மன நோய் போன்றவை கேதுவின் அசுப பலன்கள். அசுவினி, மூலம் மற்றும் மகம் நட்ச்சத்திரங்களின் அதிபதி. கேதுவிற்க்கான தலம் " கீழப்பெரும்பள்ளம் ". விநாயகர் வழிபாடும், வைடூர்யம் அணிவதும், கொள்ளு தானம் செய்வதும் கேது தோஷ நிவர்த்திகளாகும். இத் தலத்தில், மேற்கு முகமாய் காட்சி அருளும் கேது பகவான்  மேலும் அறிய ...

கல்விக்கு அதிபதியாம் "புதன்" குடி கொண்டுள்ள "திருவெண்காடு"  >>>
ஞான காரகனான "புதன்" தன்னை வழிபடுவோர்க்கு மிகுதியான அறிவையும், ஞானத்தையும் அருள்பவன். கன்னி ராசியில் உச்சமாகும் இவனது ஆட்சி வீடு மேஷம். வித்யா காரகனான இவன், ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி நட்சத்திரங்களின் அதிபதி. புதன் வீற்றிருந்து அருள்வது " திருவெண்காடு" காசிக்கு நிகரான தலங்களில் ஒன்று. அப்பர் பெருமான், " வெண்காடே, வெண்காடே என்பீராகில், விடாத வல்வினை விரட்டலாமே " என்கின்றார். இத் தலத்தில் செய்யப்படும் தான தர்மங்களுக்கு கோடி புண்ணியம் உண்டு. சமயக் குரவர் நால்வராலும் பாடப் பெற்ற இத் திருத் தலம் " ஆதி சிதம்பரம் " எனவும் அழைக்கபடுகிறது. இத் தலம் வழிபடுவோரின் பாவங்கள் தீர்ப்பதால் " பாபனாசபுரம் " எனவும் வழிபடப்படுகிறது. நவக்கிரகங்கள் நேர் வரிசையில் உள்ள இத் தலம் பட்டினத்தார், துறவு மேற்கொள்ளும் முன் வழிபட்ட திருத் தலம்.  மேலும் அறிய ...
 
  <<<  சுப யோக அதிர்ஷ்டங்களை அருளும் "சுக்கிரன்" குடி கொண்டுள்ள "கஞ்சனூர்"

வாகன காரகனான " சுக்கிரன் " குடி கொண்டுள்ளது " கஞ்சனூரில்". இவர் அசுரர்களின் குரு என்பதால் " அசுர குரு" என்றும், வெண்ணிறம் கொண்டதால் "வெள்ளி" என்றும் அழைக்கப்படுபவர். தன்னை வழிபடுவோர்க்கு, அதிர்ஷ்டங்களையும், சுக, போகங்களையும், ஐஸ்வர்யத்தையும் அருள்பவர். வாமன அவதாரத்தில், மகாபலி சக்ரவர்த்தியை காக்க வேண்டி, தன் ஒரு கண்ணை வாமனனிடம் பறி கொடுத்தவர். பின்னர், மகாவிஷ்ணுவாலேயே, நவக்கிரக அந்தஸ்த்தை பெற்றவர். மிதுன ராசியில் உச்சமடையும், இவரது ஆட்சி வீடு ரிஷபம் மற்றும் துலாம். பரணி, பூரம் மற்றும் பூராடம் நட்ச்சத்திரங்களின் அதிபதி. பிற தலங்களில் உள்ளது போல, இங்கு சுக்கிரனுக்கு தனி சந்நதியோ, உருவமோ இல்லை. சிவ பெருமானே, சுக்கிரனாய் அருள்பாலிக்கிறார். வைரம் அணிவது, வெள்ளிக் கிழமை விரதம் இருப்பது, ராஜ ராஜேஸ்வரியை பூஜிப்பது  மேலும் அறிய ...

ஞான காரகனான " கேது பகவான் " அருள் புரியும் " கீழப்பெரும்பள்ளம் "  >>>

சாயா கிரகமான " ராகு " தனி சந்நதி கொண்டு வீற்றிருப்பது " திருநாகேஸ்வரத்தில்". பாற்கடலை கடைந்து எடுத்த அமுதத்தை, மோகினி அவதாரமெடுத்து, அசுரரை விலக்கி, தேவர்கள் மட்டும் பருகச் செய்தார் மஹாவிஷ்ணு. இதை அறிந்த, அசுரன் ஒருவன், தேவர் உரு கொண்டு, அமுதம் பருகினான். இதனை சந்திர, சூரியர் விஷ்ணுவிடம் கூற, திருமால், தன் சட்டுவத்தால் அவனது தலையை துண்டிக்க, அமுதம் அருந்திய காரணத்தால், தலை வேறு, உடல் வேறாகியும் அசுரன் இறக்கவில்லை. பின்னர் செய்த கடும் தவத்தினால், வெட்டுண்ட தலை " ராகு" வாகவும், உடல் " கேது" வாகவும் மாறி, நவக்கிரக அந்தஸ்த்தை பெற்றன. திருவாதிரை, சுவாதி, சதயம்  மேலும் அறிய ...
 
 
ஞான காரகனான " கேது பகவான் " அருள் புரியும் " கீழப்பெரும்பள்ளம் "  >>>

சாயா நவக்கிரகங்களில் " ஈஸ்வர " பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி பகவான். இவர் ஆயுள் காரகன். சனியின் பலம் கொண்டுதான் ஒருவரது ஆயுள் அமைகிறது. " சனி போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை " என்றனர் ஆன்றோர். பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அளிப்பவர் இவர். ராகு காலம், எம கண்டம் இரண்டுமே சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற நேரங்கள். ஒரு கால் ஊனமான இவர், மாங்கல்ய காரகராவார். புத்திர பாக்கியம் கொடுப்பவர். மனிதரது வாழ்வில் ஏழரைச் சனி மூன்று முறை வரலாம். முதலில் வருவது " மங்கு சனி " இரண்டாவதாய் வருவது " பொங்கு சனி". மூன்றாவதாய் வருவது " மாரகச் சனி" . இரும்பு, எண்ணெய், கருப்பு தானியங்கள், புதையுண்ட பொருட்கள் ஆகியவற்றிற்கு இவரே காரணகர்த்தா மேலும் அறிய ...
பூமி மற்றும் சகோதர காரகனான, "செவ்வாய்" உறையும் "வைதீஸ்வரன் கோயில்"  >>>

நவக்கிரகங்களில் மூன்றாவதாய் விளங்கும் " அங்காரகன் ", சகோதர மற்றும் பூமி காரகன். செந்நிறமான இவன் மிருகசீரிஷம், சித்திரை மற்றும் அவிட்டம் நட்சத்திரங்களின் அதிபதி. தனி சந்நதி கொண்டு, இவன் அருள்பாலிப்பது மயிலடுதுறையை அடுத்துள்ள " வைதீஸ்வரன் கோயிலில் ". செவ்வாயை வழிபட, சொறி, சிரங்கு, குஷ்ட நோய், வெப்பு நோய் முதலியன தீரும். செவ்வாய், " உன்னை செவ்வாய் கிழமைகளில் வழிபடுவோர்க்கு, சகல பீடைகளும் நீக்கி, அருள் செய்வாயாக " என சிவனிடம் வரம் பெற்றவன். வைதீஸ்வரன் கோயிலில், மூலவர் சந்நதியின் கிழக்கே, தெற்கு முகமாய் நான்கு கரங்களுடன் காட்சிதருபவன். இவன் பூமியின் புத்திரன். பேரழகு கொண்டவன். மழையை கொடுப்பவனும் இவனே, தடுப்பவனும் இவனே. அமோக விளைச்சல், இவனது சுப பலன். பணக் கஷ்டம், வாத ,குடல் நோய்கள் இவனது அசுப பலன்கள்.    மேலும் அறிய ...
 
நவக்கிரக வழிபாட்டு முறைகள்
நவக்கிரக தலங்கள் வரைபடம்
Cabs in Kumbakonam
Furnitures in Kumbakonam
Hotels in Kumbakonam
Vinayakar Worship Hanuman Worship Lord Muruga Arupadai Veedukal Dhosa Parikarankal Abisheka Palankal Hinduism Hinduism Samaya Kuravar Nalvar Nayanmar Arupaththu Moovar Panniru Alwarkal Trichy Divya Desam Kumbakonam Divya Desam Thirunankur Divya Desam Tirunelveli Nava Thiruppathikal Panja Pootha Thalankal Nava Kailayankal Jothir Linkankal Siva Worship
                    All Photos and Imgaes Including Cocept are Copyrighted @ Kumbakonam Tourism                    To Use Images and Content ASK Webmasters.                    A Social Initiative Project Maintained by Elucidators.in , Kumbakonam